“ஆழிவாய் முத்தம் அடுக்கிய பற்கள்,
வேழத் தலையென விம்மிய மார்பகம்,
தாழை மணக்கும் தளிர்படுமேனி”…….கவியரசர் கண்ணதாசன்.
எவனோ வைத்த நெருப்பு எல்லோரையும் சுட்டது போலாகி விட்டது ஆந்திர நடிகைகளுக்கு!
கலை நிகழ்ச்சி என சொல்லி அமெரிக்காவுக்கு அழைத்து நடிகைகளை காமத்துக்கு பலி கொடுத்த ஆள் மொடுகுமுடி.ஆந்திரத்து பிரபலம்! . இவருக்கு உடந்தையாக இருந்த மனைவியும் சிக்காகோ சிறையில்,
யாரையெல்லாம் விசாரணைக்கு அழைப்பார்களோ என்கிற பீதியில் தெலுங்கு நடிகைகள் இருக்கிறார்கள் .இப்படி சிக்கலில் வம்படியாக மாட்டி இருக்கிற நிலையில் அடுத்த மாதம் கலை நிகழ்ச்சி நடத்தப் போவதாக அமெரிக்காவில் இருக்கிற ஆந்திர அசோசியேஷன் அறிவித்திருக்கிறது.
“எதற்காக இந்த நிகழ்ச்சி, நடிகைகளை எதற்காக அழைத்து வருகிறீர்கள் ,நோக்கம் என்ன ” என்றெல்லாம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்துகிறார்கள். இதனால் அங்கு வாழ்கிற ஆந்திர மக்களும் அசோசியேஷன்களும் அவமானத்துடன் இருக்கிறார்கள்.
அந்த நிகழ்ச்சிக்கு வருகிற நடிகைகள் யாருக்கும் விசா கொடுப்பதாக இல்லை என அறிவித்திருக்கிறது,
இதை விட கேவலம் இருக்க முடியுமா?