என்னதான் பரபரப்பு கூட்டுவதற்கு செயற்கையாய் செய்திகளை சித்தரித்தாலும் சற்றேனும் மனிதாபிமானம் இருக்கலாமல்லவா? மிரட்டுவதும் இருட்டுச்செய்திகளை முன்னிலைப்படுத்துவதும் ‘கிசு கிசு வின் இலக்கணமாகி விட்டது.
ஆந்திராவில் ராணா டக்குபதியின் தம்பியின் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியவர் ஸ்ரீ ரெட்டி. தற்போது ராணாவின் உடல் நிலை பற்றி மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டு “சார் உடம்பை பார்த்துக்குங்க சார்” என அனுதாபம் காட்டுகிறார்.
அந்த அளவுக்கு ராணாவைப் பற்றிய செய்தி ரவுண்டு கட்டி இருக்கிறது. அவருக்கு கிட்னியில் பிரச்னை அதனால் அடுத்தவாரம் சிங்கப்பூர் அல்லது அமெரிக்க செல்கிறார் என்பதாக சிலர் கட்டி விட்டிருக்கிறார்கள்.
“அய்யா சாமிகளா எனக்கு எந்த பிரச்னையுமில்லை.ரத்த அழுத்தம் இருக்கு. நான் நல்லாத்தான் இருக்கேன். என் உடம்பை பார்த்துக்க எனக்குத் தெரியாதா ,நீங்க ஏன் கவலைப்படுறீங்க?” என கேட்டிருக்கிறார்.
“காட்டிவிட்ட வேதமெல்லாம் கண்மறைத்த தேனெனிலோ , காட்டியவை பொய்யென்று கண்டு கொண்ட காரணந்தான்!”—கவியரசர் கண்ணதாசன்.