ஆந்திராவில் சூர்யா, கார்த்தி சகோதரர்களுக்கு தனித்த மார்க்கெட் .ரசிகர்களும் அதிகம். அண்ணன் சூர்யாவின் தயாரிப்பில் தம்பி நடித்திருக்கும் இரு மொழிப்படமான ‘சின்ன பாபு’வின் இசை வெளியீட்டு விழா ஆந்திராவில் நடந்தது ,
புராதன சிறப்பு வாய்ந்த சிம்ஹாசலம் ஆலயத்துக்கு சூர்யா கார்த்தி, தெலுங்கு பட அதிபர்கள் சென்றுள்ளனர்.சிறப்பு வழிபாடு நடந்தது .எல்லாமே வித்தியாசமான வழிபாடுகள்தான். தூணுடன் கட்டிக்கொள்வது என்பது மிகவும் முக்கியமான வழிபாடு என்கிறார்கள்.இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா “தம்பி உடையான் படைக்கு அஞ்சான் ‘என்பார்கள். அதைப்போலத்தான் எனக்கு என் தம்பி கார்த்தி. அவரை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவருடைய அண்மைக்கால படங்களைப் பார்க்கிறபோது மிகவும் வியப்பாக இருக்கிறது. இந்தப்படத்தை நாங்கள் விவசாயிகளுக்கு சமர்ப்பிக்கிறோம். விவசாயம் இன்று அருகிக்கொண்டு வருகிறது” என்பதாக பேசினார் .இந்த விழாவில் டைரக்டர் பாண்டிராஜ், நடிகர் சூரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
“வெண்ணீறு பூசுங்கள்,
வேந்தன் முகம் பாருங்கள்
.விளக்கேற்றி பூஜியுங்கள்.
விடிவு வரும் வேதனைக்கு
முடிவு வரும் எப்போதும்
வினை தீர்ப்பான் தண்டபாணி'”—–கவியரசர் கண்ணதாசன்