தமிழுக்கு ஒட்டாத எமி ஜாக்சனை டைரக்டர் ஏஎல். விஜய்தான் கோலிவுட்டுக்குக் கொண்டுவந்தார், இரண்டொரு தமிழ்ப்படங்களில் எதோ அவருக்கு தெரிந்தது வரை நடித்தார். தற்போது ஷங்கர் படத்தில் நடித்து வருகிறார். ஏகப்பட்ட கிராபிக்ஸ் சித்து விளையாட்டுகள் உள்ள படம் அது. டைரக்டர் வெள்ளைக்காரப் பெண்ணாகவே சித்தரித்திருப்பார் என்று நம்பலாம்.
நம்ம ஆட்களுக்கு கவர்ச்சி என்றால் கவிச்சி சாப்பிடுவதைபோல.!
அதனால் அவ்வப்போது தமிழ் தெலுங்கு படங்களில் உடம்பு காட்டிவிட்டு போகிறார். இந்தி நடிகைகளே பிகினியில் வரும்போது எமி வருவதில் என்ன ஆச்சரியம்? ஆனால் அடிக்கடி ஏடாகூடமான படங்களை வெளியிட்டு பரபரப்புக் காட்டி வருகிறார். அவரது பாய் பிரண்ட் தோளில் சவாரி செய்கிற படம் தற்போது வைரல்!