போன மாதம் தேங்கா சட்னியில் உப்பு குறைச்சல்னு இன்னிக்கி வந்து புருஷன் சண்டை போடுறான் என்று சொன்னால் அது ஏதோ ஒரு வம்புச்சண்டைக்கு வாய்க்கால் வெட்டுறான்னு அர்த்தம். அது மாதிரிதான் இருக்கிறது நமது காவல்துறையின் வேலை.
பல பிரிவுகளில் டைரக்டர் கவுதமனை கைது பண்ணியவர்கள் அடுத்து சில டைரக்டர்களை குறி வைத்திருப்பதாக சொல்கிறார்கள். குறிப்பாக இயக்குநர் இமயம் பாரதிராஜா,வெற்றி மாறன் ஆகியோரை பிடித்துப் போடலாம் என்று பேசிக்கொள்கிறார்கள்.கிரிக்கெட் போட்டி நடந்தபோது அதை நடத்தக்கூடாது என்று போராடியது நினைவு இருக்கிறதா?அந்த சம்பவத்தை வைத்து கைது நடவடிக்கை என்கிறார்கள்.
“கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கிறீர்களா” என்று டைரக்டர் வெற்றிமாறனை கேட்டதற்கு “வரட்டும்,பார்க்கலாம்.முன்னதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை” என்றார்.