இருக்கிறவனுக்கு முட்டியில வலி. இல்லாதவனுக்கு வயித்திலே வலி என்கிற கதையாகி இருக்கிறது காலாவின் காதலி ஹுமா குரேஷியின் கவலை.
“ஹாலிவுட்டில் சக்சஸாக நடந்திருக்கு. படுக்கக்கூப்பிட்டார்னு புகார் சொன்னதும் பெரிய ஆள் என்றும் பார்க்காமல் தூக்கி உள்ளே வைத்தார்கள். புகார் சொன்ன நடிகைகள் செல்வாக்கானவர்கள். பயப்படல. ஆனா பாலிவுட்டில் அந்த அளவுக்கு துணிச்சல் இல்லை. குற்றம் சொல்கிறவர்களும் சம்பந்த ஆட்களின் பெயரைச் சொல்வதில்லை. பயம். எதுக்குப் பயப்படனும்? இந்தியாவிலும் ஹாலிவுட் மாதிரி சக்சஸ் ஆகணும்னு நான் கடவுளைக் கும்பிடுறேன்” என்று சொல்லி இருக்கிறார்.
ஆசாமிகளை பிடிப்பதற்கு சாமி துணைக்கு வருவாரா என்ன?