கணக்குப் போடுவதில் செட்டிநாட்டு கணக்குப் பிள்ளைகளும் தயாரிப்பாளர் ஜி தனஞ்செயனிடம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். மனக்கணக்குப் போட்டு பேரேட்டில் ஐந்தொகை போட்டுவிடுவார்கள்.அவ்வளவு துல்லியமாக இருக்கும் செட்டி நாட்டுக் கணக்கு வழக்கு.!
அதைப்போல தமிழ்நாட்டில் எத்தனை ஸ்கிரீன்ஸ்,எத்தனை பேர் ஒரு ஷோவுக்கு வரணும்,எத்தனை ஷோ போட்டால் லாபம் வரும் ,படப்பிடிப்புத் தளங்களில் எப்படி வேலை நடக்கிறது என்பதையெல்லாம் கணக்குப் போட்டு ஐந்தொகை கட்டுவதில் மிஸ்டர்.சந்திரமவுலி தயாரிப்பாளர் ஜி தனஞ்செயன் படு கெட்டி! படத்தை புரமோட் பண்ணும் உத்திக்கு இவரிடம் கன்சல்ட் பண்ணவேண்டும்!
மிஸ்டர் சந்திரமவுலிக்கு ஒரு ஆப் தயாரித்து புழக்கத்தில் விட்டிருக்கிறார், பத்து கேள்விகள் .பதில் சொன்னால் பலவித பரிசுகள்.கையில் செல்போன் இல்லாத கிழவி உண்டா? எப்படி புரமோட் பண்ணுகிறார் பாருங்கள்.
இதற்கான விழாவுக்கு கவுதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி சரத்குமார், காமடியன் சதீஷ், இயக்குநர் திரு உள்பட அத்தனை டெக்னிஷியன்களும் வந்திருந்தார்கள். அதில் ரெஜினா அணிந்து வந்திருந்த ‘சீ த்ரு’ படு சிரமத்தை ஏற்படுத்தி விட்டது. அவரால் தொடைப்பகுதியை முழுமையாக மறைக்க முடியவில்லை.கால் மேல் கால் போட்டிருந்தாலும் சைடில் எப்படி மறைக்க முடியும்?
சரி அவரும் கவுதம் கார்த்திக்கும் படத்தில் ஒரு ஆட்டம் போட்டிருக்கிறார்கள் பாருங்கள் துணிஞ்ச கட்டைங்க.ராத் தூக்கம் போச்சுங்க. ஆனால் எல்லாப் புகழும் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதனுக்கே!சிறப்பான ஒளிப்பதிவு .
மகனை விட கார்த்திக் இளமை அழகு இருவரும் போட்டியிட்டு நடித்திருக்கிறார்கள்.
அது சரி குட்டி சாத்தான் என்று வரலட்சுமி சொன்னாரே ,யாரை?