தமிழ்ச் சினிமாவுக்கு வந்த இந்திய அழகி!

தமிழ் சினிமா என்கிற  கடலில் முத்தெடுக்க ஆல் ஸ்டேட்  அழகிகள் வந்து கொண்டு இருக்கிறார்கள்.  அவர்களில் ஒருவர்தான் வங்கத்துத் தங்கம் உபாசனா.

 திரை அறிமுகம் என்னவோ  கன்னட படம் மூலமாகத் தான்.

சுமார் 80 விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார், சினிமாவைப்பற்றி என்ன சொல்கிறார்?

“எனக்கு சின்ன வயசிலிருந்தே சினிமா மீது ஆர்வம் உண்டு!அதனால் பரதம்  கிளாசிகல் டான்ஸ் கத்துக்கிட்டேன்.அப்பா அம்மா பிறந்தது வங்காளம் ..நான் பிறந்தது குஜராத். படித்தது கர்நாடகா, இப்போ வாழ்வது தமிழ் நாட்டில்… ஆக இந்தியா முழுக்க ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்பது என் ஆசை” என்கிறார் உபாசனா.  (நல்ல ஆசைதான் !)அப்பா மெக்கானிக்கல் இஞ்சினீயர் .அம்மா  தலைமை ஆசிரியையாக இருந்து இப்போ என் கூட இருக்கிறார்.நானும் சாப்ட்வேர் இஞ்சினீயர் தான்.( நல்ல வேலையாச்சே)  2015 ல் இந்திய அளவில் எல்லா மாநில அழகிகளும் கலந்து கொண்ட அழகிப் போட்டியில் மிஸ் இந்தியா பட்டம் வென்றிருக்கிறேன்.”என்கிறார் உபாசனா!