நூறு ரூபாயை கொடுத்துவிட்டு பல நூறு ரூபாய்களை கிட்டி போட்டு வசூலிக்கிற மகாத்மாக்களைப் பற்றிய படம் பொதுநலன் கருதி!
கந்துவட்டிக் கருணாமூர்த்திகளுக்கு கடுப்பு வருமா வராதா?
“மிரட்டுகிறார்கள்.அதனால்தான் பத்திரிகையாளர்களை சந்தித்துச் சொல்கிறேன்” என்கிறார் இயக்குநர் சீயோன்.
“தமிழர்கள் படம் எடுக்க முன்வருவதில்லை.எல்லாமே கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குப் போய் விட்டது “என்கிறவர் எடுத்திருக்கிற படத்தில் கருணாகரன், சந்தோஷ்,அருண்ஆதித்.இமான் அண்ணாச்சி , சுபிக்ஸா, லிசா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
“அரசியல் கொள்ளையர்களை விட்டு விட்டு கந்துவட்டி கருணையாளர்களைப் பற்றி படம் எடுப்பது ஏன்?”
“பாளையங்கோட்டை கலெக்டர் ஆபீஸ் முன்பாக இசக்கி முத்து-சுப்புலட்சுமி குடும்பத்தினர் கந்துவடி கொடுமையினால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகவும் பாதித்து விட்டது.இப்படி நிறைய சம்பவங்களைப் பார்த்திருக்கிறேன்.இந்த சம்பவங்களுக்கு பின்னால் இருக்கிற நிழல் உலக தாதாக்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது இந்தப்படம். உண்மையைச்சொல்ல பயப்பட வேண்டியதில்லை”என்கிறார் சீயோன்.
இந்தப்படத்துக்கு தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன். பக்க பலமாக இருப்பவர் பி.டி செல்வகுமார் .இவர் படு துணிகரமானவர்.
“தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அரசு கொடுத்த பணம்.மக்களின் வரிப்பணம்.மக்கள் கொடுத்ததை மக்களுக்கே திருப்பிக்கொடுப்பது என்ன நியாயம்.?துப்பாக்கிச்சூடு நடத்த உத்திரவிட்ட அதிகாரிகள்,அமைச்சர்களின் சொந்த பணத்தில் இருந்து கொடுக்க வேண்டும்” என்கிறாரே செல்வகுமார்,