அப்பன் முருகனுக்கு மாங்கனி மீது ஆசை. உலகையே சுற்றி வரவில்லையா? கடேசியில் அண்ணன் பிள்ளையார் வசம் பழம் போய்ச்சேர இவர் பழநி மலை மீது தண்டாயுதபாணியாக!
இறைவனுக்கே ஆசை இருக்கும்போது இரண்டு வசூல் ராஜாக்களான இயக்குநர் மோகன்ராஜா,நடிகர் ஜெயம் ரவி அப்பாவான மோகனுக்கு ஆசை வரக்கூடாதா?
“இமான் …நான் உங்களின் விசிறி. உங்களின்’ குறும்பா’ பாட்டுக்கு மயங்கி உடனே பூங்கொத்து அனுப்பியவன். உங்களின் படங்களில் ஏதாவது ஒரு பாட்டு எனக்கு பிடிக்கிறது .நீங்க சீக்கிரமா இந்திப்படங்களுக்கு இசை அமைக்கணும்.அது எனது ஆசை” என்றவர் ஜெயம் ரவியை நம்பாமல் போன நிகழ்வு ஒன்றையும் குறிப்பிட்டார்.
“1987-ம் வருஷம் .அப்பா ரவிக்கு வயசு 7. நான் எடுத்துக் கொண்டிருந்த படத்துக்கு அந்த வயசில் ஒரு சிறுவன் தேவை. ரவியால் நடிக்க முடியுமான்னு சந்தேகம். அதனால் வேற பையனை வச்சு எடுத்தேன். ஒரே ஒரு சீன்ல ரவியை நடிக்க வச்சேன். அவ்வளவு பிரமாதமா நடிச்சான். நான் தனியாப் போயி என்னை நானே அடிச்சிக்கிட்டேன். நம்ம பிள்ளையை நாமே நம்பலியேன்னு வருத்தப்பட்டேன். இன்னிக்கி ரவி ஒரு ஹீரோவை தயார் பண்ணி கொடுத்திருக்கிறான் ” என்று பேரன் ஆரவ் பற்றி பெருமைப்பட்டுக்கொண்டார்.
பேரன் ஆரவ் பிறந்தநாள், டிக் டிக் டிக் பட வெற்றி விழா இரண்டையும் ஒரு சேர நடத்தி இரண்டு கேக்குகளை வெட்டினார்கள்.