இன்னும் லைகா நிறுவனம் அறிவிக்காவிட்டாலும் இந்தியன் இரண்டாம் பாகத்தில் உலகநாயகன் கமலுடன் இணைந்து நடிக்கப் போகிறவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்கிறார்கள்.
“இந்தியன் 2 படத்தின் அறிவிப்பை கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிவித்தார் இயக்குநர் ஷங்கர். சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தில் சி.ஜி வேலைகள் ஒரு பக்கம் நடக்க மறுபக்கம் இந்தியன் 2 வின் வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன, ஷங்கரின் கதை வேலைகளை உதவியாளர்கள் விவாதங்கள் நடத்தி செழுமைப் படுத்தி வருகிறார்கள்..அனிருத் இசை அமைக்க இருக்கிறார்.
உலக நாயகனின் அரசியல்பிரவேசத்துக்கு துணையாக இந்தப்படம் இருக்கும் என்று நம்புகிறார்கள். அறம் படத்துக்குப் பிறகு பெண்ணை முன்னிலைப்படுத்துகிற வலுவான கதைகளில் மட்டுமே நயன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
.