கோடிகளில் சம்பளம் வாங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி என்பது உலகமே அறியும்!அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் வாங்கிய கடனை கட்டாமல் சுப்ரீம்கோர்ட்டின் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறார்.!
ரஜினி சொன்னதைப் போல ‘சிஸ்டம் கெட்டுப் போய் இருக்கிறது!’
கோச்சடையன் அனிமேஷன் படம் எடுப்பதற்காக பெங்களூர் ஆட் மீடியா நிறுவனத்திடம் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழியாக பத்து கோடி கடன் வாங்கி இருக்கிறார் லதா ரஜினிகாந்த். மீடியா ஒன் குளோபல் நிறுவனத்துக்கு டைரக்டர் லதா ரஜினிகாந்த்.
கடனை திருப்பிச்செலுத்தாமல் லதா ரஜினிகாந்த் இழுத்தடித்ததால் வழக்கு உச்ச நீதி மன்றம் வரை சென்றது. 6.2 கோடி பாக்கியை ஜூலை 3-ம் தேதிக்குள் கட்டச்சொல்லி உத்திரவிட்டது.
ஆனால் லதா ரஜினி கடன் பாக்கியை கட்டவில்லை. வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 10.ம் தேதிக்குள் பணத்தைக்கட்டவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.