விக்ரம்,அஜித்,சிம்பு, சமுத்திரக்கனி இப்படி முன்னணி நடிகர்களை இயக்கியவர் வி.இசட் ,துரை.நல்ல மனிதர்,அதனாலேயே அவருக்கு அவரை வெளிச்சம் போட்டுக்காட்டத் தெரியவில்லை. தற்போது ஒரு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
கதையின் நாயகன் சுந்தர்.சி.
காமடிக்கு நாயகன் யோகிபாபு.
தற்போது “கூப்பிடு யோகி பாபுவை” என்று பணத்தோடு பலர் அலைகிறார்கள்.
“கதாநாயகனாக நடிக்க வைக்கிறேன்”என்று சிலர் வந்தபோது “ரொம்ப நன்றி ஐயா,அந்த தகுதி எனக்கில்லை.ஏழைக்கேத்த எள்ளுருண்டை கிடைச்சா போதும்”என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்.
நாயகனாக மாறிய பல காமடியன்களை அன் ரிசர்வ்டு பெட்டியில் ஏற்றிவிட்ட ரசிகர்கள் வாழ்கிற பூமி என்பதை நன்றாகவே தெரிந்திருக்கிறார் யோகிபாபு.