“தண்ணிக்குள்ளதானே திரியிது, அது தண்ணிப் பாம்பாத்தான் இருக்கும்னு புடிச்சால் அது படம் எடுத்து ஆடுது.கெட்ட பாம்பு” என்று கடந்த கால சம்பவத்தை கடை விரிக்கிறார் ஆம்னி.
கேப்டன் விஜயகாந்தின் ஹானஸ்ட் ராஜ் கதாநாயகி, புரட்சித் திலகம் சரத்குமாரின் இதுதான்டா சட்டம் படத்தின் முக்கிய நாயகி ஆம்னி. அந்த காலத்தின் திராவிட நடிகை. தெலுங்கு தேசம்தான் வாழும் பூமி. ஆனால் தயாரிப்பாளர் ஹாஜா மைதீனை கல்யாணம் செய்து கொண்டு பெங்களூரில் கவுரவமாக வாழ்ந்து வருகிறார்.முக்கியமான தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.
ஆந்திராவில் தற்போது படுக்கை பிரச்னைதான் தலை தூக்கி நிற்கிறது. ஸ்ரீ ரெட்டி என்கிற நடிகை கிழி கிழி என கிழித்து நாறடிக்கிறார்.இவரை விட சிக்காகோ போலீஸ் பெயர் பட்டியலுடன் கண்கொத்திப்பாம்பாக காத்திருக்கிறது.இந்த சூழலில்தான் அந்தக்கால ஆம்னி கருத்துகளை பகிர்ந்திருக்கிறார்.
“நடிக்கிறதுக்குப் போனால் கெஸ்ட் ஹவுஸ் ரெடி… படுக்கைக்கு வர்றியான்னு கூப்பிடுற கெட்ட பழக்கம் தெலுங்கில் மட்டுமில்ல. தமிழிலும் இருந்தது. இப்ப இருக்கான்னு தெரியல. சென்னைக்கு நடிக்கப் போனப்ப என்னை கெஸ்ட் ஹவுஸ்க்கு வரச் சொன்னவங்களும் இருந்தாங்க, நோக்கம் புரிஞ்சது.நான் போகல. இந்த மாதிரியான கேவலங்களை புதுசா வந்த ஆளுங்கதான் செய்தாங்களே தவிர பிரபலமான தயாரிப்பாளர்களோ நடிகர்களோ செய்யல.”என்கிறார் ஆம்னி என்கிற மீனாட்சி.