அது சிற்றாறுதான் என்று சிலர் கணக்குப் போட ,அதுவோ பொங்குமாங் கடலைப் போல பெருக்கெடுத்து ஊரெங்கும் ஓடி வயல்வெளிகளை நிரப்பி வருகிறது. இதைப் போலத்தான் சிவகார்த்திகேயனும்!
சிவகார்த்திகேயன் படம் என்றால் தமிழ்ச்சினிமாவில் தனி கலெக்சன் கார்டு போடுகிறார்கள்.அவருக்கென ஒரு மாஸ் இருக்கிறது .இதனால் கிராப் லைன் உயரம் போகிறது .
இதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் எப்படி?
சீமைராஜாவை தொடர்ந்து ‘நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.அந்த படத்துக்கு இசை ஏஆர்ரகுமான். ஒளிப்பதிவு நீரவ் ஷா.
அங்கேதான் இருக்கிறது அற்புத விளக்கு.
இந்தியாவிலேயே இதுவரை யாரும் பயன்படுத்தாத விலை உயர்ந்த கேமராவை பயன்படுத்துகிறார்கள். ஹாலிவுட் படங்களான ‘அவேஞ்சர்ஸ்’ ‘இன்பினிட்டி வார்” ஆகிய பிரமாண்டமான படங்களுக்கு பயன்படுத்தப்பட்ட அலெக்சா எல்.எப் என்கிற கேமரா விஞ்ஞான பிக்சன் படங்களுக்கு பயன்படுகிறது. சிவகார்த்திகேயனின் படம் புதிய பரிணாமத்தைக் கொடுக்கப்போகிறது என்று ஹாலிவுட் சாட்சியாக நம்பலாம்.