பேசாம சீரியலுக்கே திரும்பிடலாமா என்கிற மனநிலைக்கு மக்களை கொண்டு போய்க்கொண்டிருக்கிறார் பிக் பாஸ். ஐஸ்வர்யா, யாசிகா வுடன் மகத் ‘ஈஷிண்டே ‘திரியறது போர். எதற்கெடுத்தாலு கிஸ் கொடுக்கிறியா என்று மகத் கேட்பதைத்தான் ஸ்கிரிப்ட் ரைட்டர் விரும்புறாரான்னு தெரியல.
நேத்து கொடுத்த டாஸ்க் ரெண்டும் மொக்க.! வாட்டர் டாங் ஓட்டைய அடைக்கிறது,தண்ணிய அள்ளி வீசறது இதெல்லாம் ஒரு டாஸ்க்கா? நித்யாவுக்கும் பாலாஜிக்கும் காதல் பூக்கிறதுக்கு ஒரு டாஸ்க் என்றுதான் தோன்றியது.
பாலாஜி இட்லி தட்டை பின்பக்கமா தொடைச்சுக்கிட்டதை அனந்த் பார்த்துவிட்டதால் அது சண்டையாக வெடிக்கும் என எதிர் பார்த்தார்கள் .ஆனால் பொசுக்கென போயிருச்சு.
ஆங்கிலம் பேசினால் தண்டனை என்று ஒரு கண் துடிப்பு. எதற்காக இப்படியெல்லாம் பிக் பாஸ் வெறுப்பேத்துறார்னு புரியல
.சீரியல் போர் அடிக்கிதுன்னு ஆறுதல் தேடி வந்தவங்களை விரட்டி விட்டுறாதிங்க பிக்பாஸ்.