ஒத்தை ஆளாகவே கம்பு சுத்துற கில்லாடி கவுதம் கார்த்திக். கூடவே அப்பா நவரசநாயகன் கார்த்திக். இந்த மனுசன் விட்ட ‘கேப்’ ல தான் பல கதாநாயகன்கள் வந்துவிட்டு திரும்பி இருக்கிறார்கள்.
தற்போது பிள்ளையுடன் சேர்ந்து சிலம்பம் சுத்துகிறார் என்றால் வசூல் ஏரியாவில் பண மழை பொழியுமே! மிஸ்டர் சந்திர மவுலி, எதிர்பார்க்கப் படுகிற படம். இயக்குநர் ‘திரு’வின் டீம் அப்படி!
கணக்குப் போட்டு ,இடம் பார்த்து இறக்கினால் ஜெயிக்கலாம் என்கிற கணக்குப் புலிதான் தயாரிப்பாளர் தனஞ்செயன். கடந்த வாரம் வெளியான படங்களில் எல்லாமே படுத்துக் கிடக்கின்றன. அவர்கள் போட்ட கணக்கு வேறு.ரசிகன் போட்ட கணக்கு வேறு என்றாகி இருக்கிறது.
ஆக மிஸ்டர் சந்திரமவுலிக்கு வசூல் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தியேட்டர்காரர்கள் கணக்குப் போட்டிருக்கிறார்கள்.