
‘சாமி ஸ்கொயர் ’படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்று இருக்கிறது. மில்லியன் கணக்கிலான ரசிகர்களின் ஆதரவைப் பெற்று இன்றும் இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் சாமி ஸ்கொயர் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்திருக்கிறது.
சாமி ஸ்கொயர் படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்திருக்கிறார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் செக்க சிவந்த வானம், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்திருப்பவர். தமிழ் திரையுலகில் நடிப்பு திறன் அதிகமுள்ள நடிகைகளின் பட்டியலில் இவருக்கும் இடமுண்டு. இவரின் திறமையை உணர்ந்த இயக்குநர் ஹரி முதல் பாகத்தில் திரிஷா நடித்த கேரக்டரில் இவரை நடிக்க வைத்திருக்கிறார்.
இவருக்கும் சீயான் விக்ரமிற்கும் இடையேயான காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் தற்போது பழனி உள்ளிட்ட பல பகுதிகளில் முகாமிட்டு படமாக்கி வருகின்றார்.
இந்த படத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரபு, பாபி சிம்ஹா,சூரி, இமான் அண்ணாச்சி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தை தமீன் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன் ஏராளமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.












