டார்ச்சர் நடிகை என்று மொத்தப்பட உலகமும் அவரைத் தள்ளி வைத்தாலும் சிலரை அவர் தள்ளாட விடுகிறார் என்பதுதான் ஆச்சரியம். தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் இந்த இரண்டிலும் ஜாம்பவான்கள் இருந்தும் சுண்டைக்காய் ஸ்ரீ ரெட்டியின் வாயை அவர்களால் அடைக்க முடியவில்லை. தற்போது சகலக ஷங்கர் என்கிற சிரிப்பு நடிகரை விளாசித் தள்ளி இருக்கிறார் ஸ்ரீ.
“உம்படம் ரிலீஸ் ஆகுது. உனக்கு புரமோஷன் தேவை. அதுக்காக உன்னோட அபிமான ஹீரோ பேரை யூஸ் பண்ணிக்கிற.தப்பில்ல. ஆனா என்ன ஏன்யா வம்புக்கு இழுக்கிறே. வாயைக் கொடுத்து வம்பா புண்ணாக்கிக்கொள்ளாதே! மூவி ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷனில் எத்தனை மாமன்கள் இருக்காங்கங்கிற லிஸ்ட் எங்கிட்ட இருக்கு.நாறிடுவீங்க” என்கிறார் .
அடங்கவே மாட்டியாம்மா !
அடக்க மாட்டிங்களாப்பா !