அந்த மனுஷன் ஜெமினி கணேசனைத்தான் காதல் மன்னன்னு சொல்லுவாங்க. அந்த விருதை சிம்புவுக்கு டிரான்ஸ்பர் பண்ணிடுங்கப்பா. நமக்குத் தெரிஞ்சிது நாலு லவ் ! அதில சில்வர் ஜூபிலி நயன்தாராதான்! நாலு லவ்வும் விடை பெற்று போயாச்சு.
“தம்பி.! உங்களுக்கு நாலு லவ் தானே?”ன்னு கேட்டா “வெளியில தெரிஞ்சது நாலு! இன்னும் தெரியாம இருக்கிறது எத்தனைன்னு நான் சொன்னாத்தானே தெரியும்! திருந்தி வாழ்ந்திட்டிருக்கேன். விட்ருங்கப்பா” என்கிறார்.
“கரெக்டா ஷூட்டிங் டைம்முக்கு முன்னாடியே செட்டில் ஆஜர். டைரக்டர் சொல்கிற சீனுக்கு தன்னோட பெஸ்ட்டை கொடுத்து அசத்துறார்.டப்பிங் டைம் கரெக்ட்டா ஆஜர், ஒரு குறை சொல்ல முடியாதபடி வண்டி ஸ்பீடு எடுத்து போயிட்டிருக்கு! ” என்கிறார்கள் அவரை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறவர்கள்.