வயசு 36 .மே மாதமுடன் முடிந்து தற்போது 37 நடக்கிறது. திரை உலக அனுபவம் 20 வருஷம் .எல்லா சாதனைகளையும் பண்ணியாச்சு. இன்னும் யாருக்காக வெயிட்டிங்? மோகினி,சதுரங்கவேட்டை 2,கர்ஜனை ஆகிய மூணு படங்களும் இன்னும் ரிலீஸ் ஆகல. அது தயாரிப்பாளரின் கையிருப்பை வைத்து வெளிவரவேண்டியது. வரும்போதுதான் வரும். வியாழ நோக்கம் வந்திருக்கா இல்லையா?
திரிஷாவின் ஜாதகம் என்ன சொல்லுது? அம்மா கோண்டு திரிஷாவுக்கு எப்ப கல்யாணம்?
தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் காதல் கற்பனையில் கப்பல் விட்ட கதையாகிப் போச்சு.
தயாரிப்பாளர் வருண் மணியனின் காதல் தனி விமானத்தில் தாஜ்மகால் வரை பறந்து போச்சு. நிச்சயதார்த்தமும் கிராண்ட். ஆனால் மணமேடை ஏறமுடியல.
தற்போது அவர் இரட்டை இதயங்களுடன் வெளியிட்டிருக்கும் டிவிட்டரின் அடையாளம் காதல் வயப்பட்டிருப்பத்தின் வெளிப்பாடுதானே? யாரந்த லக்கிமேன்?