மயிலாடுதுறை மான்குட்டிக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா?
சூர்யாவின் தயாரிப்பு. தம்பி கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கிற படம். பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. படம் இன்னும் ரிலீஸ் ஆகல. அதற்குள் நடிப்பின் சிறப்பைக் கேள்விப்பட்டு தளபதி விஜய் பாராட்டி இருக்கிறார் என்றால் பிரியா பவானி சங்கருக்கு றெக்கை முளைக்காமல் இருக்குமா?
இந்த பொண்ணு சாப்ட்வேர் எஞ்சினியர்.இன்போசிஸ் கம்பெனியில்! அதை விட்டு விட்டு டி.வி. தொகுப்பாளினியாக வந்து விஜய் டி.வி. வழியாக பேமஸ் ஆனார். அங்கேயே இருந்தால் எப்படி ?
அடுத்த பிளாட்பாரம் சினிமா இங்கே வந்து விடு என்று மேயாத மானில் புல் தேடிய மானை கடைக்குட்டி சிங்கம் கவ்விக் கொண்டு வந்து விட்டது காயம் இல்லாமல்!
தற்போது தளபதி விஜய்யின் வாழ்த்துகள்.
“என்னால நம்பவே முடியலிங்க. விஜய் சார் பாராட்டி இருக்கிறார் என்பதை! எவ்வளவு உயரத்தில் இருக்கிறார். ஆனந்த கடலில் பயணிப்பது மாதிரி இருக்குங்க” என்கிறார் பிரியா.
வாழ்த்துகள் !