பிக்பாசும் டாஸ்க் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால் எல்லாமே கடற்கரையில் கட்டிய மண் வீடாக கரைந்து போய்க் கொண்டிருக்கிறது. மகத் , ஷாரிக், ஐஸ்வரியா,யாசிகா லவ் மேட்டர்ஸ் எல்லாம் ஜீவன் இல்லாத நடிப்பாக இருக்கிறது. அவர்களுக்குக் கட்டிப்பிடிப்பதோ,காதலிப்பதோ,கன்னத்தில் ஒத்திக்கொள்வதோ புதிசு இல்லை .எல்லாமே சினிமாவில் செய்தவைதான்.கடந்த கால பிக்பாசில் ஓவியா –ஆரவ் இடையில் உண்மையான லவ் இல்லை என்றாலும் இருவரிடையேயும் இயல்பான நடிப்பு வெளிப்பட்டது. நம்பகத்தன்மை இருந்தது. ஆனால் தற்கால பிக்பாசில்?
டாஸ்க் எல்லாம் சொதப்பல். தண்ணீரை டேங்கில் நிரப்புவது, அதை மும்தாஜை வைத்து உள்ளடி வேலை செய்து குறைக்க செய்வது உயிரே இல்லையே! மும்தாஜின் அழுகை சோகம் துரோகம் எதிலும் துடிப்பு இல்லை.மும்தாஜ் குழைவதும்,சென்றாயன் இடுப்பை அசைப்பதும் அருவெறுப்பாக இல்லையா?
டேனி.பாலாஜி எல்லாம் சந்தைக்கடை கரைச்சல் மாதிரியே இருக்கிறது. வெசல் டீம் சண்டையிடும்போதும் மகத் செய்யும் கட்டியணைத்தல் சுவையாகவா இருக்கிறது?நித்யா தலையில் அடித்துக் கொள்வதுதான் உண்மை.
பிக்பாஸ் டி.ஆர்.பி.ரேட்டிங் சரிவு என்கிறதே ரிப்போர்ட்?