தளபதி விஜய் புகை பிடிப்பது மாதிரியான போஸ்டர் வெளியாகி எத்தனையோ நாளாகிவிட்டது. இப்போதுதான் எடப்பாடி அரசுக்கு புரை ஏறியிருக்கிறது. முதலில் கண்டனம் தெரிவித்தவர் பாமக டாக்டர் அன்புமணி ராமதாஸ். புகை பிடிக்காமல் இருந்தால் உங்கள் ஸ்டைல் பிரமாதமாக இருந்திருக்கும் என்று சொல்லியிருந்தார்.
சர்கார் படம் அரசியல் நிறைந்த படம் என்பதை அடிக்கடி ஊடகங்கள் சொல்லி வந்ததால் எப்படியாவது இடைஞ்சல் கொடுக்க வேண்டும் என்கிற மனநிலைக்கு வந்த அமைச்சர்கள் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம். இது பக்கா அம்மா ஸ்டைல். மேலும் எட்டு வழிச்சாலைக்கு தனது ஊடகங்கள் வழியாக கடுமையான குடைச்சலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது சன் குழுமம்.திமுக ஆதரவு ஊடகம்.. பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் பேட்டிகளையா போடுகிறாய், கதற அடிக்கிறேன் பார் என்று தயாரிப்பாளரான சன் குழுமத்தின் மீதுள்ள கோபத்தை தளபதி விஜய் மீது காட்டவைத்திருக்கிறது தமிழக அரசு பொது சுகாதாரத்துறை.
திரைப்படங்களில் ஊது ஊது என்று புகைக்கும் காட்சிகளைப் பற்றி கவலைப்படாத த,பொ.பணித் துறை போஸ்டர் மீது அக்கறை காட்டி நோட்டீஸ் அனுப்பி இருப்பது நியாயமாக இல்லை.