சர்கார் படத்துக்கு இப்படியொரு பப்ளிசிட்டியை பா.ம.க. தொண்டர்கள் தேடித்தருவார்கள் என்று சத்தியமாக யாரும் எதிர்பார்க்கவில்லை. தளபதி விஜய் படமான சர்கார் க்கு விடுத்த முதல் போஸ்டரில் சிகரெட் புகைப்பது மாதிரி இருந்தது. இதை பாமக தலைவர் அன்புமணி கண்டித்திருந்தார், “சிகரெட் இல்லாதிருந்தால் இன்னும் ஸ்டைலாக இருக்கும்’ என்று கூறி இருந்தார்.
இதன் பின்னர் தூக்கத்திலிருந்து விழித்த தமிழக அரசு பொது சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அந்த போஸ்டரை தயாரிப்பாளர்கள் எடுத்து விட்டார்கள்.
ஆனால் பாமக வினர் டிவிட்டரில் ‘சிகரெட் கொளுத்தி’ என நக்கல் செய்ய விஜய் ரசிகர்கள் பா.ம.க.வை ‘குடிசை கொளுத்தி ‘ என்று பதிலுக்கு நையாண்டி செய்ய அந்த சண்டை வலுவாகி இருக்கிறது. தயாரிப்புக்கு சந்தோசம்.
“நீங்கள் எப்படி அடித்துக் கொண்டால் என்ன, எனக்கு விளம்பரம்!” என்று மனசுக்குள் மத்தாப்புக் கொளுத்துகிறது.