
“பந்து வீசுவதில் நீ மன்னனாக இருக்கலாம். ஆனா தப்பான ஆளா இருந்திட்டியே ?” என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்டார் பவுலர் முகமது ஷாமி மீது மனைவியே புகார் செய்திருக்கிறார்.
ஹாசின் ஜகான். முன்னாள் மாடல் அழகி. இவரை காதலித்துத்தான் ஷாமி கல்யாணம் செய்து கொண்டார். இருவருக்குமிடையில் என்ன கசப்பான அனுபவமோ, ஜகான் குழந்தையுடன் தனித்து வாழ்கிறார். மாடலிங் துறையில் மட்டுமில்லாமல் படத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். கணவன் மீது மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு சுமத்தி கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதமும் எழுதி இருக்கிறார்.
விசாரணை நடத்த சொல்லி வாரியமும் உத்தரவிட்டுள்ளது.
ஏன் இந்த முடிவு?
“உடல் ரீதியாக மட்டுமில்லாமல் மனரீதியாகவும் கொடுமைப் படுத்தப் பட்டேன். துபாய், பாகிஸ்தானிலுள்ள கேர்ள் பிரண்ட்ஸ்களுடன் மேட்ச் பிக்சிங் நடத்தினார். இதனால் மனம் உடைந்தேன். தனித்து வாழ்கிறேன். வழக்காடவும் வாழ்க்கை நடத்தவும் பணம் தேவை.அதனால் நடிக்கிறேன்.மாடலிங் பண்ணுகிறேன்”என்கிறார்,ஹாசின் ஜகான்












