விஜய் சிகரெட் புகைப்பது மாதிரியான போஸ்டரை சன் பட நிறுவனம் வெளியிட்டதும் அதற்கு அரசியல் சாயம்பட்டையாக அடிக்கப்பட்டு விட்டது. வழக்கம் போல பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டித்தார். தமிழக அரசு, அடையாறு புற்று நோய் வாரியம் என பல முனையிலிருந்து கடுமையான நடவடிக்கைகள் பாய….
பட நிறுவனம் வாயைத் திறக்கவில்லை.
‘மாநாடு ‘ படத்தில் அரசியல் பேசவிருக்கும் சிம்புதான் பிரச்னையை கையில் எடுத்திருக்கிறார்.
“மாநாடு படத்தில் நடிப்பது ரொம்பவும் சந்தோஷமாக இருக்கு.சரியான டைம்லதான் சுரேஷ் காமாட்சி ஆரம்பிச்சிருக்கார்.அந்த படத்தில் அரசியல் பேசப்போவதால் அரசியல் வாதி ஆகிடுவேன் என்று அர்த்தமில்ல.பேசவேண்டிய விஷயங்களை பேசித்தான் ஆகணும்.!
தம் அடிக்கிற பிரச்னை பாபாவிலும் இருந்து தொடர்ந்து வந்துகிட்டு இருக்கு.அங்கிள் அன்புமணி கூட கண்டித்து சொல்லி இருந்தார்.அவரே விவாதிக்க தயாராக இருப்பதாகவும் சொல்லி இருந்தார். அதனால் அவரே ஒரு தேதி , இடம் ஏற்பாடு செய்தால் திரைத்துறை சார்பில் நிலைமையை மக்களுக்கு எடுத்துச்சொல்ல தயாராக இருக்கிறேன்.விவாதிக்க தயாராக இருக்கிறேன்” என்று வீடியோவில் கூறி இருக்கிறார்.
இப்ப பந்து பாமக பக்கம் இருக்கு. தேர்தல் நேரம் பார்த்து விவாதத்தை நடத்தாமல் இப்பவே ஏற்பாடு செய்தால் நல்லது.