வாய்ப்புகள் இல்லாததால் வசதிகள் போயிடிச்சி ! காவேரி வறண்டதால் வயல்கள் காய்ந்து விட்டன.மழை பெய்தால்தான் விவசாயம் பண்ண முடியும் என்கிற கவலையில் இருக்கிறான் விவசாயி. இப்படி வரட்சியில் கிடக்கிற தமிழனுக்கு வர்ணம் பூசப் பார்க்கிறார் தெலுங்கு நடிகை. ஆந்திராவில் படுக்கை விஷயங்களை பச்சையாக சொல்லி விளம்பரம் தேடிக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீ ரெட்டியின் கழுகுப் பார்வை தமிழ்த் திரை உலகத்தின் மீது திரும்பி இருக்கிறது.
தினமும் ஒருவரின் பெயரைச் சொல்வாரோ என்னவோ?
இன்று என்றோ நடந்ததாக ஒன்றை சொல்லியிருக்கிறார்.
“5 வருடங்களுக்கு முன்னர் நட்சத்திரக் கிரிக்கெட் விளையாடுவதற்காக ஹைதராபாத் வந்த நீங்கள் பார்க் ஹோட்டலில் இருந்தீர்கள். எனக்கு வாய்ப்புகள் கொடுப்பதாகச் சொல்லி என்னை பயன் படுத்திக் கொண்டீர்கள். !நினைவு இருக்கிறதா?” என கேட்டிருக்கிறார்.
இவர் சுத்தமுடன் இல்லை என்பதைத் தானே காட்டுகிறது! பயன்படு பொருள் ?