ஆந்திர திரையுலகில் கன் பைட் காஞ்சனாவாக மாறி இருக்கிற ஸ்ரீ ரெட்டிக்கு அங்கு பலத்த எதிர்ப்பு. இதன் காரணமாக மூன்று முறை செல்போன் நம்பர்களை மாற்றி இருக்கிறார். புது எண்ணை தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு மற்ற விஷயங்களை பேஸ்புக்கில்விளாசி விளாசிக்கொண்டிருக்கிறார்
இன்றைய பேஸ்புக் நிலவரம்
“விஷால் மிரட்டுவார் என நினைக்கிறேன். ஆனாலும் கோலிவுட்டின் இருட்டுப்பக்கத்தை காட்டியே தீருவேன்” என்பதாக எழுதி இருக்கிறார்.
உண்மையை சூடம் கொளுத்தி ஆண் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். ஆனால் ஒரு பெண் கண்ணீர் விட்டு கதறியபடி பக்கெட் நிறைய பொய் சொன்னாலும் “அடடா அப்படியா பண்ணிட்டான் பாவி,வெளங்குவானா”என சாபம் கொடுப்பார்கள்.. பெண்களுக்கு இது ஒரு வசதி.ஆனால் தொடர்ந்து சொல்லி வந்தால் சந்தேகம் வந்து விடும்.அனேகமாக ஸ்ரீ ரெட்டி அந்த கட்டத்துக்கு வந்து விட்டதால் கோலிவுட் பக்கமாக கால்வைத்திருக்கிறார் என நம்பலாம்.
இயக்குநர் முருகதாஸ் மீது பிள்ளையார் சுழியைப் போட்டவர் அடுத்து ராகவா லாரன்சை பதம் பார்த்தார்.இனி யாரோ?
சொல்வது உண்மையோ பொய்யோ எதுவாக இருந்தாலும் ஊடகங்களில் வருகிறபோது அந்த செய்தி உயிர் பெற்று விடுகிறது .நடிகர்கள் மீது அவநம்பிக்கை ஏற்படுகிறது. இதனால் ஸ்ரீ ரெட்டியுடன் சும்மா பேசியவர்கள் கூட கோலிவுட்டில் நடுங்குகிறார்கள்,
சாய்பாபா பக்தையான இவரின் ஸ்லோகம் என்ன தெரியுமா?
“இண்டஸ்ட்ரியில் இருந்து காஸ்டிங் கவுச் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்”என்பதுதான்.