“என்ன தவம் செய்தேன் ,இவர் படம் பார்ப்பதற்கே”என்று வாலிபர்களும் வயோதிகர்களும் ஷகீலா படம் என்றால் வண்டி கட்டி வந்த காலமும் உண்டு.
இவரது படம் ரிலீஸ் ஆகும் நாளன்று பெரிய ஹீரோக்கள் தங்களின் பட ரிலீசை கேரளத்தில் தள்ளி வைத்து விடுவார்கள். ஜொள்ஸ் காட்சிகள் என்றால் இவரது பெயரைச் சொல்லாமல் இருப்பதில்லை. தமிழ்ப்படங்களில் ஷகீலாவின் பெயர் சொல்லி காமடிக் காட்சிகளும் வெளியானது உண்டு.
நெல்லூரில் இருந்து வந்து திரையில் ‘பி’ கிரேடு படங்களின் உச்ச நடிகையாக திகழ்ந்த ஷகீலாவின் வாழ்க்கை வரலாறை படமாக்குகிறார்கள்.ஷகீலாவாக நடிப்பவர் ரிச்சா சத்தா. சரியான செலக்சன்.
நடிகையர் திலகம் வாழ்க்கையை சொன்னவர்கள் தற்போது என்,டி,ஆர், ஒய்.எஸ்.ஆர் .வாழ்க்கைகளையும் படமாக்குகிறார்கள்.
ஷகீலா படம் இந்தி,மலையாளம்,தெலுங்கு,தமிழ் என நான்கு மொழிகளிலும் வரப்போகிறது.!