சனியன் பிடிச்ச நாரை கெழுத்தி மீனை விழுங்கிய கதையாகிடும் போலிருக்கு ஸ்ரீ ரெட்டியின் கதை!
இதுவரை நடிகர்களை நார் நாராக்கிய அந்த நடிகை தற்போது டாப் லெவல் நடிகைகளை தன்னோடு ஒப்பிட்டு வம்புக்கு இழுத்திருக்கிறார். பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத பரந்த தேசம் தான் ஸ்ரீ ரெட்டி என்கிற அளவுக்கு தினமும் பேஸ்புக்கில் பிரச்னை ! எல்லாமே விவகாரம்தான்!
இந்த பாழாப்போன ஆந்திரப் ப்ரோடியூசர்கள் ரெண்டு படத்தை கொடுத்து வாயை அடைக்க வேண்டியதுதானே! ராத்திரி அலற வேண்டிய ஆந்தை பகலிலும் அலறுவதை தடுத்து நிறுத்துங்கய்யா! இல்லேன்னா யாராவது வாழ்க்கை கொடுங்க.!
இன்றைய ஸ்ரீ ரெட்டி பஞ்சாயத்து.
“சிலர் என் லிஸ்ட் பெரிசுன்னு நினைக்கிறாங்க.தப்பு.! என் லிஸ்ட் ரொம்ப ரொம்ப சிறிசு. திரி….,நய,,கா….,ச….இவங்கல்லாம் மிகத் திறமையான நடிகைகள்.டாப் ஆர்ட்டிஸ்ட்ஸ்!இவங்க வாயைத் திறந்து அவங்க லிஸ்ட்ட சொன்னால் மிகப் பெரிசு. நீங்க செத்துருவிங்க” என்று கிசு கிசு பாணியில் வாயை திறந்திருக்கிறார்.
உடனே ஒரு ரசிகர் பொங்கிவிட்டார்!
“த்தா! தியாகத்தலைவி,தங்கத்தாரகை,திராவிட அரசி,கலைச்செல்வி,ராஜமாதா ,நயந்தாராவை பத்தி இல்லாதது பொல்லாதது சொல்லாத.அப்புறம் ஒவ்வொருத்தனும் தற்கொலை படையா இருக்கோம்.சின்னா பின்னமாயிடுவே!”
காவேரிக்காக பொங்கினாரோ இல்லையோ தனது அபிமான நடிகைக்காக பொங்கிவிட்டார்.