“சினிமாக்காரர்கள் தன்னை கற்பழித்து விட்டதாக” தினமும் ஒரு செய்தி அவிழ்க்கும் ஆந்திரத்து ஸ்ரீ ரெட்டிக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் நடிகர் கார்த்தி அறிவுரை வழங்கி இருக்கிறார்.
அங்குசத்துக்கு அடங்காமல்தானே யானைக்கு மதம் பிடிக்கிது. தம்மாத்துண்டு குச்சிக்கா பயப்படப்போகுது?
“இந்தாம்மா தினமும் பேஸ்புக்கில் ஆதாரமில்லாமல் வாசிக்கிறே.! தகுந்த ஆதாரம் வெச்சிருக்கியா,கோர்ட்டுக்கு போ! இல்லேன்னா போலீசுக்குப் போ!” என்று சொல்லியிருக்கிறார்.
“ஸ்ரீ ரெட்டி மேட்டரில் நடிகர் சங்கம் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கஇயலாது. யாராவது புகார் கொடுக்க வேண்டும்” என்கிற சங்கத்தின் நிலையையும் தெளிவு படுத்தி இருக்கிறார்.