
பிளாக் பஸ்டரான இந்தியனின் இரண்டாம் பாகம் செப்டம்பரில் தொடங்கும் என்பதாக உலகநாயகன் கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். இந்தப் படத்தின் ஹீரோயின் நயன்தாராவாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இசை அனிருத் என்பது முன்னரே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஷங்கருக்கு பல பெருமைகளைத் தேடித்தந்த படம்தான் இந்தியன் .கமலுக்கு பல விருதுகள் கிடைத்தன. முதல் பாகத்தில் சுகன்யா,மனிஷா கொய்ராலா கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்திருந்தன. பிக்பாஸ் முடிந்ததும் கமலின் கலைப்பயணம் தொடங்கிவிடும்.ஷங்கரின் 2.0 படத்தின் வேலைகளும் நிறைவு பெற்றிருக்கும்.












