இயக்கும் வாய்ப்பு இல்லாது போனால் என்ன ,வயது கூடிப் போனால் என்ன, கைச்சரக்கு இருக்கும் வரை திரை உலகம் நம்மை தாங்கும் என்கிற நம்பிக்கை கலைஞனுக்கு இருக்க வேண்டும்!
எண்பது வயது நாடகக் கலைஞனாக மக்கள் செல்வன் விஜய சேதுபதி நடித்து வரும் சீதக்காதி படத்தில் கூடுதலாக ஒருவர் இணைந்திருக்கிறார். இயக்குநர் இமயம் பாரதிராஜா. முன்னதாக முக்கிய வேடத்தில் நடித்து வருகிறவர் இயக்குநர் மகேந்திரன்.இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடித்து வருகிறார்கள்.
முதியவர் வேஷம் போடுவதற்காக ஐந்து மணி நேரம் பிடிக்கிறது விஜயசேதுபதிக்கு! உலகநாயகன் கமல் இந்தியனுக்காக பிராஸ்தடிக் மேக் அப்தான் போட்டிருந்தார்.