“இஷ்டப்பட்டுத்தானே போனே! ஒருத்தி ஒரு ஆளிடம் அல்லது ரெண்டு ஆளிடம் ஏமாறலாம். வரிசையா இத்தனை பேரிடமா ஏமாறுவாங்க.?” என்று ஸ்ரீ ரெட்டிக்கு கிடுக்கிப்பிடி போடுகிறார் நடிகர் போஸ் வெங்கட்டின் மனைவி சோனியா.
குட்டி பத்மினி ஒரு பக்கம் ஆதரவாக குரல் கொடுத்தால் சோனியா இந்தப் பக்கம் கோபமாக அனல் கக்குகிறார்.
“சான்ஸ் வேண்டும்னு நீயே இஷ்டப்பட்டு போயிருக்கே!ஒருத்தி விருப்பபட்டு இன்னொருத்தருடன் உறவு கொண்டால் அது குற்றம் இல்ல.சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால் பெண்ணின் விருப்பம் இல்லாமல் வலுக்கட்டாயமாக நடந்து கொண்டால் அது குற்றம். ஆனால் நீ பெண் இனத்தையே கேவலப்படுத்திட்டியே!அரை நிர்வாணப்போராட்டம் நடத்துனதே விளம்பரத்துக்குத்தானே!” என்று செம அடி கொடுத்திருக்கிறார்.