திடீர் குபீர் ஆச்சரியங்களைத் தருவது கலைப்புலி தாணுவின் வழக்கம்.!” 120 நாளில் படத்தை முடிக்க வேண்டும்.முடிக்கும் வரை சின்ன செய்தி கூட வெளியில் கசியக்கூடாது ” என்கிற நிபந்தனையோடு ’60 வயது மாநிறம் ‘என்கிற படத்தை தயாரித்திருக்கிறார் .
பிரகாஷ்ராஜ்,விக்ரம் பிரபு,சமுத்திரக்கனி ஆகிய மூவரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். காணாமல்போன பிரகாஷ்ராஜை கண்டுபிடிப்பது கதை .இதில் விக்ரம்பிரபு ,சமுத்திரக்கனி இருவருக்கும் முக்கியமான கேரக்டர்கள்.
திரைக்கதை இயக்கம் ராதாமோகன். இசைஞானிதான் இசை. வசனம் விஜி. ஒளிப்பதிவு விவேக் ஆனந்த். ஆகஸ்ட்டில் ரிலீஸ்.