“என்னடா ,போர்வைக்குள்ள இருந்து பீடி நாத்தம் வருது?” “ஒண்ணுமில்ல ஆவி பிடிக்கிறேன்”னு புள்ள சொன்னா “நல்லா புடி” ன்னு சொல்ற அப்பன்னு நம்மள நினைச்சிட்டாங்களா ஷாலினி பாண்டே ? நம்பனுமா நாம்ப? அர்ஜுன் ரெட்டியில் லிப்-லாக் காட்சியில் நடித்திருப்பவர் ஷாலினி,
இவரிடம் “லிப் லாக் காட்சியில் சிறப்பாக முத்தம் கொடுத்திருந்தீர்களே ” என கேட்டதற்கு அடித்தார் பாருங்கள் ஓர் அடி!
“அதெல்லாம் லிப் லாக் இல்லிங்க. இரண்டு காதலர்களுடைய எமோஷன்”!
சூப்பருங்க. 100% காதல் ,கொரில்லா ஆகிய இரண்டு படங்களிலும் அந்த எமோஷனை காட்டலியே! ஆனால் சின்ன திருத்தம். அர்ஜுன் ரெட்டியில் இருவருமே வாயை மூடிக்கொண்டுதான் கிஸ் பண்ணியிருக்கிறார்கள் .உதடுகளை கவ்வவில்லை.!!!!