இதுவரை இல்லாத அளவுக்கு கலைஞரின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது மருத்துவ மனை வெளியிட்டுள்ள அறிக்கையில்” முக்கிய உறுப்புகள் இயக்கத்தை பராமரிப்பது சவாலாக இருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்துக்கு கண்காணிக்க வேண்டியிருக்கிறது.”என்பதாக குறிப்பிடப் பட்டிருக்கிறது.அடுத்த அறிக்கை வெளிவந்த பின்னர்தான் எதையும் தீர்மானமாக கூற முடியும் என்றாலும் குடும்ப உறுப்பினர்கள் முகத்தில் ஒரு வித சோகம் கப்பி இருப்பதை கான முடிகிறது.
காவேரி மருத்துவமனை முன்பாக ஆயிரக்கணக்கில் திமுக தொண்டர்கள் திரண்டிருக்கிறார்கள்.அவர்கள் அழுது புலம்புவதையும் காண முடிந்தது. எது எப்படி என்றாலும் இன்றைய இரவு தமிழகத்துக்கு கடுமையான சோதனையாக இருக்கும். கல்லீரல் பிரச்னை பெரும் சவாலாக இருக்கிறது.