புதுசு புதுசா ஜோடி பிடிப்பதில் சிலர் கில்லாடிகளாக இருப்பார்கள். வட இந்திய திரைப்பட பத்திரிகைகளில் வருகிற நடிகைகளின் படங்கள், நடிகைகளை பிடித்துக் கொடுப்பதற்கென ஆல்பங்கள் வைத்திருக்கிற மீடியேட்டர்கள் என பல விதமாக தேடித் பிடித்து விடுவார்கள் .
அப்படி ஒரு நடிகையை அட்லி பிடித்திருப்பதாகச் சொல்கிறார்கள். எம்.எஸ்.தோனி படத்தில் நடித்திருக்கும் கியாரா அத்வானியை தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிப்பதற்கு தேர்வு செய்திருக்கிறாராம் .