முன்னாள் முதல்வரும் தி.மு.க.தலைவருமான கலைஞர் கருணாநிதி உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் இன்று பிற்பகல் முதல்வர் எடப்பாடியை அவரது இல்லம் சென்று சந்தித்தார் தி.மு.க. செயல் தலைவர் மு.க ஸ்டாலின்.
மு.க.அழகிரி மற்றும் முக்கிய நிர்வாகிகளும் சென்றிருந்தனர் .பேச்சு வார்த்தை இருபது நிமிடங்கள் நடந்தன.
கலைஞர் உடல் நலம் கடுமையான பின்னடைவை சந்தித்திருப்பதாகவே கருத தோன்றுகிறது. இந்த சந்திப்புக்கு முன்னர் மு.க.அழகிரி,மற்றும் குடும்பத்தினரை ஸ்டாலின் சந்தித்துப் பேசியதாக சொல்லப்படுகிறது.
மேலும் சென்னை மாநகரம் முழுவதும் போலீஸ் படையினர் தயார் நிலையில் இருக்கிறார்கள். தங்கள் சீருடையில் திமுக தொண்டர்களை வரும்படி சொல்லி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.