இந்திய திரை உலகத்தையே அதிர வைக்கும் செய்திகளை அள்ளி அள்ளி தந்துக் கொண்டிருக்கிறது லைகாவின் ‘டு பாயிண்ட் ஓ.’ சூப்பர் ஸ்டார் ரஜினியின் மிகப்பெரிய பட்ஜெட் படம் இதுவே. பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமாரும் நடித்திருக்கிறார்.
இந்திய அளவில் கம்ப்யூட்டர் ,வி எப் எக்ஸ் நுட்ப வேலைகளுக்கு 225 கோடி செலவு செய்திருக்கிறது லைகா. இயக்குநர் ஷங்கரை நம்பி இந்த அளவுக்கு அந்த நிறுவனம் பணத்தை வாரி இறைத்திருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்படுகிற படம்.
நடிகர்களை விட கணினியை முழுமையாக நம்பி இருக்கிறார் இயக்குநர். பாகுபலியின் சாதனையை இந்தப்படம் முறியடித்ததாக வேண்டும். வசூல்,ஓட்டம் இரண்டிலும் இந்திய அளவில் சாதனையை செய்தாக வேண்டிய கட்டாயம் படக்குழுவினருக்கு இருக்கிறது.