கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்த வராத முன்னணி நடிகர் தளபதி விஜய் மட்டும்தான்! அமெரிக்காவில் படப்பிடிப்பில் இருந்ததால் வரமுடியவில்லை. விமானத்தில் வந்தாலும் சரியான நேரத்துக்கு வர முடியாது. இதனால் தனது மனைவி சங்கீதாவை ராஜாஜி மண்டபம் சென்று இறுதி அஞ்சலி செலுத்துமாறு சொல்ல அவரும் அவ்விதமே வந்து சென்று விட்டார். அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் சமாதிக்குச் சென்று மரியாதை செய்வதாக சொல்லியிருப்பதாக அவரது ரசிகர் மன்றத்தினர் தெரிவித்தனர்.