சிவகார்த்திகேயன் படம் என்றால் பிரமாதமான ஒப்பனிங் இருக்கிறது. இதனால் தியேட்டர்காரர்கள்,விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட். தற்போது தயாராகி வரும் சீமராஜா வில் சமந்தாதான் ஜோடி. இமான் இசையில் மதுரைச்சீமையில் பிரமாண்டமாக பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது. பொன்ராம் இயக்கத்தில் வளர்ந்து வருகிற இந்த படம் செப்டம்பரில் ரிலீஸ். அடுத்து ரவிகுமார் இயக்கம்,ரகுமான் இசை, ராகுல் பிரீத் ஜோடி என வளர்ந்து வருகிற படத்தில் தற்போது பாலிவுட் நடிகர் இணைந்திருக்கிறார்.சர்தார் கபார்சிங் படப் புகழ் ஷரத் செல்கர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதை 24 ஏ எம் ஸ்டுடியோவும் உறுதி செய்திருக்கிறது.