கல்யாண வயசைத் தாண்டியும் பிசியாக இருக்கிற நடிகைகளில் திரிஷாவும் காஜல் அகர்வாலும் முக்கியமானவர்கள். திரிஷா நடித்த படங்கள் கையில் இருந்தாலும் அத்தனையும் சூட்டு வலி கேஸ்கள்தான் ! இடுப்பு வலி எடுக்கும். ஆனால் பிரசவம் நடக்காது . மிகவும் எதிர்பார்த்த மோகினி வந்து போன தடயம் கூட இல்லை.
ஆனால் காஜலுக்கு இன்னும் மார்க்கெட் இருக்கவே செய்கிறது. இவருக்கு பேய்க்கதை சொல்லி இருக்கிறார் டைரக்டர் பி.வாசு. சந்திரமுகியை விட பலம் வாய்ந்த கதையாம். ஆனால் காஜல் இன்னும் பதில் சொல்லவில்லை.