நம்ம சினிமாக்காரர்களுக்கு இருக்கிற மனப்போக்கு இருக்கே குதிரைக்கு கண் திரை கட்டுனமாதிரிதான்! கவர்ச்சியா நடிச்சா அந்த நடிகைக்கு அதுதான் நிரந்தர வழி–வலி! கவர்ச்சியா நடிச்சாத்தான் சினிமாவில கேட் திறக்கும்கிற நம்பிக்கையில ஒப்பன் பண்ணினால் அதுதான் ஜென்மச்சனி!
இப்படி புலம்புறது நடிகைதான். ருஹானி சர்மா. பரத்துடன் நடித்த பொண்ணு. அப்படியே ஆந்திரா பக்கமா போச்சு.
“அதிகமா மேக்கப் போடாதே! முகத்தில் இருக்கிற பருவை மறைக்கவேனாம்னு சொன்னாங்க. நடிச்சேன்.படம் நல்லாத்தான் போச்சு. ஆனா சான்ஸ்தான் கிளாமருக்கு வருது! அப்ப எப்படி திறமையை காட்ட முடியும்? சொல்லுங்க” என்று கேட்கிறார் ருஹானி .
பொம்பளப்புள்ள பாவம் பொல்லாதது அய்யா!