ஏவி.எம், பிரசாத் நிறுவனங்கள் படம் எடுக்காத குறையை லைகா நிறுவனம் தீர்த்து வருகிறது. சர்வ சாதாரணமாக கோடிகளை இறைத்து வருகிறது.
அகோரம் சகோதரர்கள் கூட சற்று பின்தங்கித்தான் இருக்கிறார்கள். நேரம் பார்த்து இறங்கலாம் என நினைத்திருக்கலாம்.
‘அத்தரின்டிகி தரேடி ‘என்கிற தெலுங்குப் படத்தை ரீமேக் பண்ண லைகா முடிவு செய்திருக்கிறது. இது காதல் காமடி கலந்த கலக்கலான படம். சமந்தா நடித்திருந்தார். தமிழில் சிம்புவுடன் லைகா பேசி வருகிறது. தெலுங்கில் நடித்த சமந்தாவை நடிக்க வைக்கலாம் என்கிற யோசனையும் இருக்கிறது. இந்த படத்தை இயக்குவது சுந்தர்.சி. லைகா கைய வச்சா அது தப்பா போனதில்ல. ஏற்கனவே மாநாடு படத்தில் கமிட் ஆனவர் சிம்பு. தேதிகள் பற்றிய கவலை இருக்காது.