காலக்கொடுமையடா கோபாலா.! ஒரு ஆம்பள புலம்ப வேண்டியதை ஒரு பெண் புலம்பினால் யாரை நோவது?
கணவர் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி. மனைவி அனுஷ்கா சர்மா. பாலிவுட்டில் பிரபல நடிகை. படங்களில் நடிப்பதை விடவில்லை.
ஜோதிகாவின் பத்துக்கட்டளைகளில் ஒன்றான சம்பாதிப்பதில் குறியாக இருப்பவர், ஒரு படத்தில் எம்பிராய்டரி வேலை பார்க்கும் பெண்ணாக நடிக்கிறார். மேக்கப் இல்லை. “இந்த வேடத்தில் நடிக்கப்பிடிக்கிறது. நல்ல கேரக்டர். ஓய்வில்லாமல் நடிக்கிறேன். ஆனால் வீட்டில் கணவருடன் இருப்பதற்குத்தான் டைம் கிடைக்கல .கஷ்டமாத்தான் இருக்கு “என புலம்புகிறார்.