பளபளப்பான கார் அதுவும் பாரீன் காராக இருக்கணும். ஆயிரம் ஸ்கொயர் பீட்டுக்கு மேலே இருந்தால்தான் அது வீடு. இல்லேன்னா அது வெறும் கூடு. அடுக்கு மாடி வீடாக இருந்தால் அது லக்சரி ஹவுஸா இருக்க வேண்டும் அம்மா அப்பா நாலு பேர்தான் என்றாலும் பத்து டாய்லெட்டாவது இருக்கணும். இப்படியெல்லாம் வாழ்கிறவர்கள்தான் பாலிவுட் நடிகைகள்.
ஒரு படத்துக்கு சம்பளம் 15 கோடி. ஒரு விளம்பரத்துக்கு எட்டுக் கோடி ! வாங்குகிற நடிகையின் பெயர் தீபிகா படுகோனே. இவர்தான் பாலிவுட் கோமகள்!
அடுத்து 12 கோடி சம்பளம் வாங்குபவர் பிரியங்கா சோப்ரா.இந்த சொப்பன சுந்தரி ஒரு விளம்பரத்துக்கு வாங்குவது 5 கோடி!
மூணாவது இடம் மாஜி உலக அழகி ஐஸ்வர்யா பச்சன்.1௦ கோடி சம்பளம்.
வித்யா பாலன் 7 கோடி. அனுஷ்காசர்மா 7 லிருந்து 9 கோடி வரை!
கங்கனா ரனாவத் வாங்குவது ஜஸ்ட் 11 கோடி.
கோலிவுட் நடிகைகளில் நாலு கோடி வாங்குகிற ஒரே நடிகை நயன்தாரா மட்டுமே!