நாசரின் மகனுக்கு படம் பார்க்க தியேட்டரில் வசதி இல்லை!

பொதுவாக சென்னை நகர தியேட்டர்களில் வீல் சேர்களில் அமர்ந்து படம் பார்ப்பதற்கான வசதிகள் இருப்பதில்லை. அண்மையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரான நாசரின் குடும்பத்துக்கு அத்தகைய நிலை ஏற்பட்டிருக்கிறது. நாசரின் மகனுக்கு உடல் நலமில்லை, இருந்தாலும் படம் பார்க்கும் ஆசை. அம்மாவுடன் கமலா தியேட்டருக்கு சென்றிருக்கிறார், அங்கு வீல் சேரில் அமர்ந்து படம் பார்ப்பதற்கான வசதி இல்லை. மிகவும் கஷ்டமாக இருந்தது என்று நாசரின் மனைவி கமீலா கூறி இருக்கிறார்,