96 வருடங்களில் காணாத பெரு வெள்ளம் ,பேரழிவு. இந்தியத் துணைக்கண்டமே துயரில் துடித்துப் போனது. மலைச்சரிவு, மரணங்கள், அழுகுரல் ,அபயம் கோரிய கரங்கள் என துடித்துப்போனது கேரளம். எதிர்பாராத இந்த மழையில் மல்லப்புரத்தில் பாதிக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில்! கல்யாணம் முடித்து கணவன் வீட்டுக்குப் போக வேண்டிய பெண்ணும், மாப்பிள்ளையும் எம்.எஸ்.பி.பள்ளியில் உள்ள அடைக்கலம் அடைந்தவர்களுடன் இருந்தார்கள். கல்யாணத்தை ஒத்தி வைத்து விடலாம் என முடிவு எடுத்து விட்டார்கள். ஆனால் அடைக்கலம் புகுந்தவர்கள் அதெல்லாம் வேண்டாம் திட்டமிட்டபடி கல்யாணத்தை நடத்தி விடுங்கள் என்று சொல்ல அந்த மழையிலும் கல்யாணம் நடந்திருக்கிறது. அங்குள்ள திருப்புந்தரா கோவிலில் கல்யாணம், கோவில் தர்மகர்த்தா இலவச விருந்து.
என்ன முதல் இரவுதான் இல்லை!